பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும் இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .
இருப்பினும், வாடிக்கையாளர்கள் இதற்காக வருவது சாத்தியமில்லை .
சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பொருளாதார மையங்களுக்கு வந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கவும் கொண்டு செல்லவும் முடியும்.
மேலும் இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
அதேவேளை எதிர்வரும் ஜூன் 3,4 ஆகிய திகதிகளிலும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
எனினும் பொருளாதார மையங்களுக்கு வருகைத்தர வேண்டுமென்ற காரணத்திற்காக சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தனியார் பயணங்கள் , போலிஆவணங்களை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.