அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் பகிஷ்கரிப்பில்…..

572 0

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் 01 ஆம் திகதி நண்பகல் 12.00 முதல் 1.00 மணிவரை அடையாள பணிப் புறக்கணிப்பு செய்ய சங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே தங்கள் வைத்தியசாலைகளில் இக் கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து தாதியர்களையும் ஒன்றிணைத்து தயார்படுத்துமாறு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த வகையில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினால் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பின்வருமாறு,

1. தாதிய உத்தியோகத்தர்களின் குடும்பத்தினருக்கும் ஏனைய சுகாதாரத் துறையினரின் குடும்பத்தினருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றல்.

2. அனைத்து தாதியருக்கும் ரூபா 5,000 ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல்.

3. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4,000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றல்.

4. கர்ப்பிணி தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கல்.

5. கொவிட் பரிசோதனை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போதிய வழங்களை வழங்குதல்.

6. பயணத்தடை காலத்தில் தாதிய உத்தியோகத்தர்களுக்கு கடமைக்கு வருகை தருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

7. கொரோனா சிகிச்சை மையங்களிலும் ஏனைய சுகாதாரசார் நிறுவனங்களிலும் கடைமை புரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு N 95 முகக் கவசம் மற்றும் உரிய பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட வேண்டும்.

எனவே எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் குடும்பத்தினருக்கான தடுப்பூசி ஏற்றலுக்கு மட்டுமே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கோரிக்கைகளான இடர்கால கொடுப்பனவு, கர்ப்பிணி தாதியருக்கான விடுமுறை தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்தாமை போன்ற ஏனைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் 25 ஆம் திகதி மாலை முதல் வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார சார் நிறுவனங்களிலும் தாதியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைச் செயற்பாடுகளிலிருந்து தாதிய உத்தியோகத்தர்கள் முற்றாக விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் அறியத்தருகின்றது.