கடலோரப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

182 0

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ இப்போது கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள கப்பலின் பின் பகுதிக்கு பரவியுள்ளதுடன் கப்பலில் இருந்து கடலில் விழும் கொள்கலன்களும் பல்வேறு பொருட்களும் கடல் அலைகளின் தன்மைக்கு ஏற்ப கரை ஒதுங்கி வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, தீ பிடித்த கப்பில் இருந்து கரைக்கு மிதந்து வருகின்ற பல்வேறு பொருட்கள் பற்றி கடற்படை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றதுடன் கடலோர சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து தீ பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழும் பாகங்கள் மிதந்து வர அதிக வாய்ப்புள்ள திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையிலான கடலோரப் பகுதியை உள்ளடக்கி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாட்டை தொடங்கியுள்ளது.

மேலும், இதேபோல், வெல்லவத்தை முதல் பாணந்துறை வரையிலான கடற்கரை பகுதியையும் உள்ளடக்கி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாட்டை தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், சேதமடைந்த ஒரு கொள்கலன் நேற்று(26) நீர்கொழும்பு தல்ஹேன கடற்கரையில் கரைக்குச் சென்றது, மேலும் இது தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து விழுந்த ஒரு கொள்கலன் என்று நம்பப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து விழும் கொள்கலன்கள் மற்றும் பிற பாகங்கள் திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையிலான கடலோரப் பகுதிக்கு மிதந்து வர வாய்ப்புள்ளதால் பல்வேறு இரசாயன கலவைகள் அடங்கிய எந்தவொரு பொருளையும் பிடிப்பதைத் தவிர்க்குமாறு அப் பகுதி மக்களுக்கு மற்றும் மீன்பிடி சமூகத்திக்கு கடற்படை அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல மற்றும் இந்திய கடலோரக் காவல்படையின் கடல் சுற்றுச்சூழல் சேதத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட வஜ்ரா (ICGS Vajra) மற்றும் விபாவு (ICGS Vaibhav) என்ற இரண்டு கப்பல்களும் பாதிக்கப்பட்ட MV X-PRESS PEARL கப்பல் உள்ள கடல் பகுதிக்கு சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.