குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் எண்ணெய் நிறுவன ஊழியர் கொரோனா விழிப்புணர்வு

261 0

போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து குடுகுடுப்பை அடித்தபடி குறி சொல்லும் வகையில் ஜக்கம்மா பாடலை பாடினேன். இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து குடுகுடுப்பை அடித்தபடி குறி சொல்லும் வகையில் ஜக்கம்மா பாடலை பாடினேன். இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் அவர் குடுகுடுப்பை ஆட்டியபடி, “ஜக்கம்மா சொல்றா… தயவு செஞ்சு வெளியே வராதீங்க”

“கொரோனா தொற்றிக்கொள்ளும், வெளியே வராதீங்க”

“அவசியம் இல்லாம வெளியே வந்து போலீசாருக்கு தொந்தரவு கொடுக்காதீங்க”

“வீட்டில் இருங்க, விழித்து இருங்க, தனியே இருங்க”

“அரசின் முழு ஊரடங்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்க” என்று பாடினார்.

உருட்டு விழிகளுடன் மிரட்டலாக இருந்தவரிடம் பேசிய போதுதான், அவர் உண்மையில் குடுகுடுப்பைக்காரர் இல்லை என்பது தெரிந்தது.

தல்லாகுளம் பகுதியில் வசித்து வரும் முருகானந்தம் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நான் தினந்தோறும் பத்திரிகைகள் படிப்பது வழக்கம். அதில் போலீசார் வாகன ஓட்டிகளிடம் ரோஜாப்பூ கொடுத்து ‘ஊரடங்கு காலத்தில் வெளியே வரவேண்டாம்‘ என்ற வேண்டுகோளுடன் கையெடுத்து கும்பிடுவது மாதிரியான செய்திகளை பார்த்தேன்.

கொரோனோ நோய் உச்சகட்ட வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் போலீசாரின் அறிவுரையை கேட்காமல் வாகன ஓட்டிகள் தேவையின்றி சுற்றிதிரிகிறார்களே? என்ற ஆதங்கம் எழுந்தது.

போலீசுக்கு உதவியாக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். பொதுமக்களுக்கு போலீசிடம் பயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பில்லி சூனியத்தில் அனைவருக்கும் பயம் வரும்.

எனவே வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தை தேர்ந்தெடுத்தேன். என்னிடம் வெள்ளை வேட்டியுடன் பழைய கோட் இருந்தது. அவற்றை அணிந்து கொண்டேன்.

கழுத்தில் பாசி மணிகள் சேர்ந்த மாலை ஒன்றை போட்டுக்கொண்டு கோரிப்பாளையம் சந்திப்புக்கு வந்தேன். தல்லாகுளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் சிதம் பரம் ஆகியோரிடம் நான் எனது நோக்கத்தை தெரிவித்தேன். அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.

போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து குடுகுடுப்பை அடித்தபடி குறி சொல்லும் வகையில் ஜக்கம்மா பாடலை பாடினேன். இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சிலர் என்னிடம் “அவசர தேவைக்காகவே வெளியில் வந்துள்ளேன். தவறாக நினைக்க வேண்டாம்“ என்று அச்சத்துடன் கைகூப்பி கும்பிட்டனர்.

வாகனங்களில் தேவையின்றி வந்த வாலிபர்கள் குடுகுடுப்பை வேடத்தில் இருந்த என்னை கண்டதும் பயத்தில் வந்த வழியே திரும்பி சென்றனர்.

நான் பொதுமக்களுக்கு சொல்வது என்னவென்றால் நீங்கள் எனக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் கொரோனாவுக்கு நீங்கள் பயந்துதான் ஆக வேண்டும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய். சிக்கியவர்களை எல்லாம் சீரழித்துக்கொண்டு இருக்கிறது.

பொதுமக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு போலீஸ்காரர்கள் குடும்பம், குழந்தைகளை மறந்து போக்குவரத்து சாலைகளில் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக இருந்து பொதுமக்களை நல்வழிப்படுத்தும் கருவியாக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கொரோனா காலம் முடியும்வரை குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் பொதுமக்களுக்கு குறி சொல்லிக்கொண்டு இருப்பேன். அத்தியாவசிய அவசியமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரியும் வாலிபர்கள் மனம் திருந்தினால், அதுவே எனக்கு கிடைத்த வெற்றி என்றார்.