கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 10,000 மலர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு

270 0

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு மலர் அலங்காரத்தை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலம் படம் மற்றும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்றது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் 2-வது வருடமாக மலர் கண்காட்சி நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து பிரையண்ட் பூங்காவில் ஏராளமான பூக்கள் பூத்து குலுங்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பூங்கா நிர்வாகம் சார்பில் கொய்மலர்கள், ஆஸ்ட்ரோ மேரியா, கோரியாப்சிஸ், ஹைட்ரேஞ்சியா, அகபந்தஸ் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தடுப்பு ஊசி செலுத்துவதாலும், முகக்கவசம் அணிவதாலும் கொரோனா வைரஸ்கள் உடைந்து சிதறி அழியும் என்பதை விளக்கும் வகையில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்வதால் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மலர் அலங்காரம் சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு 2 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மலர் அலங்காரத்தை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலம் படம் மற்றும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்றது.