மரம் சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு

204 0

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் சமரவள்ளி பகுதியில் மண் மேடுடன் மரம் ஒன்று சரிந்து வீந்தமையினால் குறித்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது .

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சமரவள்ளி பகுதியில் சமர்ஹில் தமிழ் வித்தியாலயத்திற்கு அருகிலே இன்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனுடன் மின் இணைப்பு தூண் ஒன்று உடைந்து சரிந்துள்ளதுடன் தொலைத்தொடர்பு கம்பிகளும் அறுந்து வீழ்ந்துள்ளன.

வீதியில் வீழ்ந்துள்ள மரத்தினை வெட்டி அகற்ற நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.