அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குடும்பத்தவர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்ட விவகாரம் – விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்

221 0

அரசாங்கத்தின் தடுப்பூசி கொள்கைக்கு மாறாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறவினர்களான பெருமளவு நபர்கள் எவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவாகள் அனைத்து நன்மைகளையும் தாங்கள் அனுபவிப்பதில் எவ்வளவு திறைமைசாலிகள் என்பது எங்களிற்கு தெரியும் என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குடும்பத்தவர்களிற்கு அஸ்டிராஜெனேகா தடுப்பூசி வழங்கப்பட்டமை உட்பட சுகாதார அமைச்சின் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை மருத்து ஆய்வுகூட விஞ்ஞான கல்லூரியின் தலைவர் ரவிகுமுதேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசிகளை வழங்குவதில் முன்னிலைபணியாளர்களிற்கு முன்னுரிமை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனமோ அல்லது இலங்கை அரசாங்கமோ ஒருபோதும் தெரிவிக்கவில்லை என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் சுகாதாரசேவை சங்கங்களிற்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் பவித்திராவன்னியாராச்சி மருத்துவ பணியாளர்களின் குடும்பத்தவர்களிற்கு அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார் என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவாகள் அனைத்து நன்மைகளையும் தாங்கள் அனுபவிப்பதில் எவ்வளவு திறைமைசாலிகள் என்பது எங்களிற்கு தெரியும் என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் 99 வீதமான முடிவுகளை தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த மருத்துவர்களே எடுக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசமருத்துவ அதிகாரிகள் தங்கள் குடும்பத்தவர்களிற்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள ரவிகுமுதேஸ் அவர்களிற்கு முதலாவது டோஸ் எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வியை எழுப்புகின்றது எனவும் குறிப்பிட்டு;ள்ளார்.

சுகாதார அமைச்சிடம் அவ்வாறான கொள்கைகள் எதுவும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளும்போது அரசாங்கத்தின் தடுப்பூசி கொள்கைக்கு மாறாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறவினர்களான பெருமளவு நபர்கள் எவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவதொழிலை சேர்ந்தவர்கள் தங்களிற்கு மாத்திரமல்ல தங்கள் குடும்பத்தவர்களிற்கும் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களை பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் ஏமாற்றியுள்ளனர் விசேடசலுகைகளை பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ள ரவிகுமுதேஸ் முதலாவது டோஸ் மருந்தினை கூட பெறாத பலர் சுகாதாரசேவையில் இன்னமும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் நடமாடும் தொற்றினால் பாதிக்கப்படும் அதிகளவு ஆபத்தை கொண்ட குழுவினர் இன்னமும் முதலாவது டோஸினை கூட பெறவில்லை எனவும் ரவிகுமுதேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.