இன்று முதல் இரு நாட்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைகளுக்கு முற்றாகத் தடை!

211 0

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன.

குறித்த இரு தினங்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்தார்.

அத்தோடு, பல்பொருள் அங்காடிகளிலும் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக்கூடாது என்றும் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மதுபானசாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.