கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தினால் அவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யலாம்

249 0
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தினால் அவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளை மனிதாபிமானமற்ற விதத்தில் தவறான விதத்தில் மருத்துவமனைகள் கையாண்டால் இது குறித்து முறைப்பாடு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் கரிசனைகளிற்கு தீர்வு காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை உரிய முறையில் நடத்துவதில்லை என்பதை சுகாதார அமைச்சு அறிந்துள்ளது, சில மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்பதையும் அறிந்துள்ளோம் என தெரிவித்தள்ள ஹேமந்த ஹேரத் இந்த விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சேவைகள் பணிப்பாளரின் கீழ் இரண்டு அதிகாரிகள் கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கான கிகிச்சை நிலையங்களின் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள் செய்யப்பட்டால் குறைபாடுகளை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.