இந்தியாவில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் காலத்தை ஜப்பான் உயர்த்துகிறது

346 0

இங்கிலாந்து, டென்மார்க், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு வந்தவர்களை 3 நாள் தனிமைப்படுத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினர் வருகைக்கு ஜப்பான் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

முந்தைய 14 நாட்களில் இந்தியாவில் இருந்துவிட்டு வந்த ஜப்பான் மக்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். இந்தநிலையில், தனிமைப்படுத்தும் காலத்தை 28-ந் தேதி முதல் 10 நாட்களாக ஜப்பான் அரசு உயர்த்துகிறது. இந்த 10 நாள் காலத்தில் அவர்களுக்கு 3 தடவை கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்துவிட்டு வருபவர்களுக்கும் 10 நாள் தனிமை பொருந்தும். இந்தியாவில் உருவானதாக கருதப்படும் உருமாறிய கொரோனா பற்றிய கவலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல், இங்கிலாந்து, டென்மார்க், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு வந்தவர்களை 3 நாள் தனிமைப்படுத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.