இலங்கை கிராம சேவகர் சங்கம் இன்று (25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை செலுத்தும் செயற்பாடுகள் தமக்குக் கவலையளிப்பதாகவும் அறிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார, அரசியல்வாதிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கிராம சேகவர்கள், மாவட்ட செயலாளர்கள், சுகாதார ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதைத் தவிர்த்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது குடும்பத்தினருக்கு மாத்திரம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
கிராம சேகவர்கள், மாவட்ட செயலாளர்கள், சுகாதார ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கும் வரையில் பணிப்புறக்கணிப்புத் தொடருமெனவும் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் இச்செயற்பாடு கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும், அரச வைத்திய அதிகாரிகள் நாட்டின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டுச் செயற்படுகிறதெனவும் குற்றஞ்சுமத்தினார்.