ஏழை நாடுகளுக்கு தடுப்பு மருந்து; உலக சுகாதார அமைப்பு தலைவர் கருத்து

214 0

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது பல நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து உலக சுகாதார அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு தடுப்பு மருந்தை சென்று சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

latest tamil news

 

 

 

குறைந்தபட்சம் 10 சதவீதம்

இந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேஸஸ் இதுகுறித்துப் பேட்டியளித்தார். தற்போதைய சூழலில் உலகில் உள்ள 193 நாடுகளிலும் குறைந்தபட்சம் 10% மக்களுக்காக தடுப்பு மருந்தினை அளித்திட வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.இந்த இலக்கை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் எட்டிவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஐநாவின் சுகாதாரத்துறை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், இதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஏழை நாடுகளுக்கு உதவ பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் உலக சுகாதார அமைப்புக்கு நிதி அளித்து வருகின்றன. கோவாக்ஸ் திட்டம் மூலமாக இந்த அமைப்பு ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு நாடுகள் பலவற்றிற்கு தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்கி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பெரிய நாடுகள் விரைவில் கொரோனாவில் இருந்து வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பல நாடுகளில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.