யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைகழகத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் நிறுத்தம்!

239 0

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த PCR சோதனைகள் நேற்றுமுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PCR சோதனைக்குரிய உபகரணங்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவை இல்லாத காரணத்தால் அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த மாத இறுதியில் இருந்து PCR பரிசோதனைக்கள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில்,அதற்குரிய உபகரணங்கள் இயந்திரங்கள் என்பவை கிடைக்கப் பெறுவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டன.

இந்நிலையில் எக்ஸ்ரக்ஸன் ரீஏஜென்ட்ஸ் O எனப்படும் இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் யாழ்.போதனா வைத்தியசாலையில்னையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்று நாளைக்கு சமூக மட்டத்திலான PCR மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சமூக மட்டத்திலான PCR சோதனைகள் மேற்கொள்ளாமல் அவசர தேவை கருதி சில சோதனைகளை மட்டும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதேவேளை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட PCR மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படாது தேங்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.