உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் காலிமுகத்திடலில் நிறுவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறித்த நத்தார் மரமானது கொழும்பிலுள்ள காலிமுகத் திடலில் நிறுவப்பட்டுள்ளது.
325 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள குறித்த நத்தார் மரமானது கின்னஸ் நாளேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நத்தார் மரத்தின் உச்சியில் 20 அடி உயரமுள்ள நட்சத்திரமும் அமைக்கப்படுகிறது. குறித்த நத்தார் மரத்தின் மின்னலங்கார வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டு நேற்றிரவு பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.
இந்த நத்தார் மரத்தில் 8 இலட்சம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நத்தார் மரத்தை உருவாக்குவதற்கு சுமார் 80 ஆயிரத்து 600 டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்று இந்த நத்தார் மரம் அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.