திடீரென இலங்கையை விட்டுச்சென்ற உலகின் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனம்!

215 0

உலகின் மிகப்பெரிய சிறுவர் உரிமை தன்னார்வ நிறுவனங்களில் ஒன்றான “தெ பிளேன் இன்டர்நெசனல்” கடந்த ஆண்டு இலங்கையை திடீரென விட்டுச் சென்றமை குறித்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இலங்கையை விட்டு சென்றதன் மூலம் பொதுமக்களையும் நன்கொடையாளர்களையும் அந்த நிறுவனம் தவறாக வழிநடத்தியுள்ளது.

அத்துடன் நாட்டில் பாதிக்கப்படக்கூடிய 20,000 சிறுவர்கள் விடயத்தில் உரிய தேவைகளை அந்த நிறுவனம் நிறைவேற்றவில்லை என்று தி கார்டியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தெ கார்டியனுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட தெ பிளேன் இன்டர்நெசனல் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் பிளான் இன்டர்நேஷனலின் வெளியேற்றம் பொறுப்பற்றது. அத்துடன் விபரிக்க முடியாதது என்று விமர்சித்துள்ளனர்.

2019 டிசம்பரில், நாட்டில் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் ஐக்கிய நாடுகள் மனித மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்பவை காட்டப்பட்டுள்ளமையால் தமது நிறுவனம் இலங்கையை விட்டு வெளியேறுவதாக பிளான் இன்டர்நேஷனல் அறிவித்திருந்தது.

எனினும் குறித்த நிறுவனத்தின் வெளியேற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தெ பிளேன் இன்டர்நெசனல் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் தொண்டு நிறுவனம் அவசரமாக வெளியேறுவதற்கான உண்மையான காரணம் அதிகரித்து வரும் செலவுகளும் மற்றும் உள்ளக மோதல்களுமாகும் என்று நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக மொனராகலை, ஊவா, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இந்த நிறுவனம் உதவியளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.