முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை

242 0

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய இரு வார ஊடரங்கு நாளையுடன் நிறைவடைய உள்ளது.

இதற்கிடையே, மருத்துவ நிபுணர் குழுவுடனும், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவுடனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய முழு ஊரடங்கு உத்தரவை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

24-ம் தேதி (நாளை) காலையில் இருந்து இந்த முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை சரிவர அமல்படுத்த முடியவில்லை. மக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்காதநிலையில் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், புதிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் நடைபெறுகிறது.