முல்லைத்தீவில் ஊடகவியலார்கள் பயணம்செய்வதற்கு அனுமதி மறுப்பு!

272 0

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோதும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக  முல்லைத்தீவு  நகர் பகுதிக்கு  செய்தி அறிக்கையிட செல்லும் ஊடகவியலாளர்கள் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையிரின் வீதி சோதனை சாவடியில் தடுத்து  நிறுத்தப்படுகின்றனர். குறிப்பாக பொலிஸ் அனுமதி வழங்கினாலும் குறித்த பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட  செயலகத்திற்கு செய்தி அறிக்கையிடலுக்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். தான் ஊடகவியலாளர் மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கு அமைய செய்தி சேகரிக் செல்வதாக படையினருக்கு தெரிவித்த போதும் படையினர் ஊடகவியலாளர் முல்லைத்தீவு நோக்கி செல்வதற்கான அனுமதியினை மறுத்துள்ளதுடன்  கடமையில் நின்ற முள்ளியவளை பொலிஸாரிடம் ஊடகவியலாளர் அடையாளப்படுத்தியபோதும் படையினர்கள் ஊடகவியலாளரை செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.

குறித்த வீதி ஊடாக  அத்திய அவசிய சேவையில் ஈடுபடும் ஏனையவர்கள் மற்றும்  பலர்  தங்களை அடையாளப்படுத்தி சென்று வருக்கின்ற  நிலையில் ஊடகவியலாளருக்கே இராணுவத்தினர் தடை விதிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இன்று பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முல்லைத்தீவு நகருக்கு செய்தி சேகரிக்க சென்ற மற்றுமொரு ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.