கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலகு புகையிரத சேவை

281 0

egbldp9கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலகு புகையிரத சேவையை விரைவில் ஆரம்பிப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்திற்கு வாகனங்கள் உள்நுழையும் பிரதான 7 நுழைவாயில் பிரதேசங்களை இனங்கண்டு இலகு புகையிரத சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் , நாளுக்கு நாள் கொழும்பு நகரத்திற்கு உள்நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளமையினால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், இம்முறை வரவு செலவு திட்டத்தில் இதற்கான துரித நடவடிக்கை எடுக்க முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் புதிய களனி பாலத்தோடு துறைமுகத்தை இணைக்கும் வழியாக வீதி நிர்மாணிப்பதற்கும், களனி பாலத்தையும் அதுருகிரிய நகரத்தை இணைக்கும் வீதி நிர்மாணிப்பதற்கான கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.