போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்துவது நடைமுறையிலிருக்காது.
கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள் உட்பட அத்தியாவசிய சேவை பணியாளர்கள் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
காய்கறிகள் போன்ற உணவுப்பொருட்களை கொண்டு செல்வதற்;கு அனுமதி வழங்கப்படும்.இந்த வாகனங்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.இந்த வாகனங்கள் மாகாணங்களிற்கு இடையிலும் பயணிக்கலாம்.
மீனவர்கள் மீன்பிடித்தலிலும் மொத்த வியாபாரத்திலும் ஈடுபடலாம்.
அனைத்து கடைகள் உணவகங்கள் பல்பொருள் அங்காடிகள் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் வீடுகளிற்கான விநியோகங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
காய்கறிகள் அத்தியாவசிய பொருட்கள் வெதுப்பக பொருட்கள் போன்றவற்றை வாகனங்கள் மூலம் விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அருகில் உள்ள மருந்தகங்களை பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
வீடுகளில் நிகழ்வுகள் – ஹோட்டல்களிற்கு செல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.