யாழில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா நிவாரணப் பொதி

359 0

யாழ்ப்பாணத்தில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதி
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணி தொற்றாளர்களுடன் நடமாடியதன் அடிப்படையில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் சுயதனிமைப் படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இடைக்கால நிவாரண உதவியாக அந்த 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொதியை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செய லகங்கள் ஊடாக வழங்கி வரு கின்றோம்.

அதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் நேற்று வரை சுமார் 7251 குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதி கொண்ட உணவுப்பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தக் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காலத்தில் எமக்குரிய விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கு அது கிடைக்கும்.

அதாவது விபரங்கள் கிடைக்கப்பெறுவதன் அடிப்படையிலேயே உதவிப் பொருட்களை வழங்க முடியும். இந்த விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலர் களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் எம்மால் வழங்கப்பட்டுள்ளன.

எனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.