ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை

231 0

வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்

இந்த நிலையில் வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
மருத்துவ நிபுணர் குழுவுடனான ஆலோசனைக்கு பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆழ்வார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.