கொரோனா ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்த முதல் பெண்

309 0

இந்தியாவில், பெண் ஒருவரின் உடல் மனித உடலில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய ஆய்வுக்காக, தானமாக வழங்கப்படுவது, இதுவே முதன்முறை.

கொரோனாவுக்கு பலியான 94 வயது பெண்மணியின் உடல் மருத்துவ ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், பெண் ஒருவரின் உடல் ‘மனித உடலில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய ஆய்வு’க்காக, தானமாக வழங்கப்படுவது, இதுவே முதன்முறை.

ஜோத்ஸ்னா போஸ் என்ற அந்த பெண்மணி கடந்த 1927 ம் ஆண்டு வங்கதேசத்திலுள்ள சிட்டகாங்க் பகுதியில் பிறந்தவர். இவரின் தந்தை, இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவிலிருந்து திரும்பிவந்தபோது, வழியில் தவறிவிட்டதால், இவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுள்ளது. குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவர், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெலிபோன் ஆப்பரேட்டராக இருந்திருக்கிறார். தொழிற்சங்க நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

 

ஜோத்ஸ்னா போஸின் பேத்தியான டிஸ்தா பாசு, ஒரு மருத்துவர். அவர் இதுபற்றி கூறியதாவது, “நான் நோயியல் துறையில் முதுகலை படிக்கிறேன். கொரோனா முற்றிலும் புதிய நோய் என்பதால், எங்களைப் போன்ற பலருக்கும் இதன் தன்மை பற்றி விரிவாக தெரியாது. இது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நாங்கள் தெரிந்துக்கொள்ள, இதுபற்றி நாங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் புரிதல் வரும். அந்த ஆய்வுக்கு, நோயியல் பிரேத பரிசோதனை எங்களுக்கு உதவும்” எனக்கூறியுள்ளார்.