நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் 16 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
அந்த தொழிற்சாலை ஊழியர்கள் 281 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 16 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 50 பேர் சுயத்தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் சுமார் 100 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.