கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

358 0

தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது;-
தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும்,
தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
மேலும், தனியார் ஆய்வகங்களில் காப்பீடு பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணமான ரூ.1200-ல் இருந்து ரூ.900 ஆக குறைப்பு.
வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.