துல்கிரிய ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி

329 0

துல்கிரிய முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் 400 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்தார்.


இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தொழிற்சாலையின் 2000 தொழிலாளர்கள் பிசிஆர் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களின் உறவினர்களைத் தேட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதார பரிசோதகர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க கூறினார்.