தபால்களை விநியோகிப்பதில் சிக்கல் – இலங்கை தபால் திணைக்களம்

274 0

கொரோனா தொற்றுப் பரவலுடன் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களுக்கு அமைய தபால்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் சேவை ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், தபால் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் தபால் ஊழியர்களை சேவைக்கு பெற்றுக்கொள்வதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து தபால் சேவையானது மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் தபால் விநியோகமும் தாமதமடைந்தது.

இதற்கமைய கிரேண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை மற்றும் ஹற்றன் தபால் அலுவலகங்கள் மற்றும் 40 உப தபால் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சிக்கல் நிலைக்கு மத்தியில் மக்களுக்கு உயர்ந்தபட்ச தபால் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.