முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நிறைவு நாள் பிராங்பேர்ட் மாநகரில் இன்று (18.05.2020 ) நினைவு கூரப்பட்டது. நகரின் மத்தியில் ஒன்றிணைந்த தமிழ்மக்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளிற்கும் , தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களிற்கும் சுடர்வணக்கம் மலர்வணக்கம் கவிவணக்கம் செய்தனர்.
நிகழ்வானது சீரற்ற காலநிலையிலும் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமைக்கு மத்தியிலும் யேர்மனிய அரச சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய சமூக இடைவெளியை பேணியவாறு அமைதியாக நடந்தேறியது. புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும் தம் தாயக விடுதலை உணர்வை மனதில் நிறுத்தி இந்நிகழ்வை இளையோர்களே ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தார்கள்.