தொற்றாளர் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டலாம்: மருத்துவர் ஹேமந்த ஹேரத்

279 0
இலங்கையில் தற்போது கொரோனா நோயாளர்கள் பதிவாகின்றதை அவதானிக்கையில், மேலும் 100 நாட்களை அடையும்போது, தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“சாதாரண கணக்கெடுப்பின்படி, ஐந்து, ஆறு தினங்களுக்கிடையே, ஒரு நபர், இரண்டு நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவராயின், ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒருமுறையும், நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும்.
அவ்வாறு ஏற்பட்டால், 100 நாட்கள் என்ற காலம் நிறைவடையும் போது, 20 தடவைகளுக்கு இந்த எண்ணிக்கை இரு மடங்கானால், நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் (பத்து இலட்சம்) அதிகளவில் பதிவாகக்கூடும்.
எனவே, கொரோனா வைரஸால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கும், சுகாதார வழிகாட்டல்களைத் தவறாது பின்பற்றுவதற்கும் பொதுமக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்” என்றார்.