அமெரிக்காவிடம் கொரோனா தடுப்பூசிகளைக் கோரியது இலங்கை!

246 0

கொரோனா தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, தடுப்பூசிகளை வழங்குமாறு இலங்கையும் அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசிகளின் தேவை அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ ​​தெரிவித்தார்.

ஏப்ரல் 26ஆம் திகதி அமெரிக்கா 60 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது என்று அறிவித்தது.

இதனையடுத்து, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர் அலைனா பி.டெப்லிட்ஸ் மூலமாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாகவும் வெளிவிவகாரத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு சபை ஆகியவை இது தொடர்பாக இலங்கையின் தேவைகளை அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன என ரவிநாத் ஆரியசிங்ஹ ​​தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல் டோஸ் எடுத்தவர்களுக்கு 6 இலட்சம் டோஸ் அஸ்ட்ராசெனெகா அவசரமாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.