காலியில் தந்தை உயிரிழந்து 9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சோகமான சம்பவம் பதிவாகி உள்ளது.
நியுமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காலி மரண பரிசோதகர் வைத்தியர் பீ.ஜீ.என்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் காலி தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்தவராகும். இந்த பெண்ணின் மரணத்திற்கு கோவிட் வைரஸ் நியுமோனியாவே காரணம் என தெரியவந்துள்ளதாக மரண பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இளம் பெண் எவ்வித நோயினால் பாதிக்கப்பட்டவர் அல்ல என தெரியவந்துள்ளது. அவர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தந்தை கோவிட் தொற்றில் உயிரிழந்து 9 நாட்களில் அவரது மகளான குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.