அஞ்சலித்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என மானிப்பாய் பொலிஸார் மிரட்டியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் அடைந்த எமது உறவுகளை படுகொலை செய்த நினைவு நாளை அனுஷ்டிக்கும் முகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய நினைவு இடத்திற்கு சென்றவேளை பேரினவாதத்தின் கருவியான பொலிஸார் அஞ்சலித்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டினர் மானிப்பாய் பொலிஸார்.
ஆனாலும் பேரினவாதத்தின் ஒடுக்கு முறையை மீறி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.
உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்தில் தடுத்து நிறுத்தப் பட்டாலும் நவாலி முருகமூர்த்தி ஆலய முன்றலில் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத் தலைவருமாகிய ஈஸ்வரபாதம் சரவணபவன் .