இந்த அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்: கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

446 0

கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தியாவிலிருந்து 3000 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்க மாட்டார்கள்.

அரசாங்கத்தின் இவ்வாறான பொறுபற்ற செயல்கள் காரணமாகவே இன்று வைத்தியசாலைகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தினார். நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 10 மில்லியன் கொவிட் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை கொள்வனவு செய்வதற்கு தனியார் துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன

அத்தோடு தடுப்பூசியை கொள்வனவு செய்து அரசாங்கத்துடன் இணைந்து அதனை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவை கூறின. ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.