முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வு தொடர்பில் செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது மக்களுக்காக ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற்ற போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிடம் அடையாள அட்டையை பொலிஸார் கேட்டுள்ளனர்.
இதன்போது ஊடக அமைச்சின் அடையாள அட்டையை அவர்கள் வழங்கியபோதும் அது பயனில்லை தேசிய அடையாள அட்டையை தருமாறு கேரியுள்ளனர். எனினும் ஊடகவியலாளர்கள் தேசிய அடையாள அட்டையை கொடுத்தபோது இன்றைய தினம் நீங்கள் வெளியில் செல்ல முடியாது உங்களை கைது செய்ய வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஊடகவியலாளர்கள் பொலிஸ் ஊடக பேச்சாளர் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியும் என தெரிவித்துள்ளாரே என தெரிவித்த போது அவ்வாறு இல்லை நாமே தீர்மானிப்பேன் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஊடகவியலாளர்களை கடும் தொனியில் எச்சரித்த பொலிஸார் சிறிது நேரத்தின் பின்னர் செல்ல அனுமதித்துள்ளனர்.