புதிய கல்விக் கொள்கை ஆலோசனையை புறக்கணித்தது தமிழக அரசு

330 0

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநில அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
ஆனால், திட்டமிட்டபடி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடத்தினார். காணொளி வாயிலாக நடந்த இந்த ஆலோசனையில் தமிழகத்தின் சார்பில் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், புதிய கல்விக்கொள்கை ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது.