இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 275 பேருக்கு தொற்று – மேலும் 21 உயிரிழப்புகள் பதிவு!

244 0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 322 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான மேலும் 23 ஆயிரத்து 462 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 21 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

பதுளை, கெலிஒயா, யாழ்ப்பாணம், இங்கிரிய, நேபொட, புளத்சிங்ஹல, இமதுவ, முருன்கஹமுல, அநுராதபுரம். மொரட்டுவ, மீரிகம, ஹாலி-எல, ஹந்தபான்கொட, ஹபராதுவ, எம்பிலிபிட்டி, நாகியாதெனிய, கடவத்த,மஹிய்யாவ,களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் காலியைச் சேர்ந்த இருவரும் இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

16 ஆண்களும் , 5 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 962ஆக அதிகரித்துள்ளது.