வடக்கில் இன்றும் 55 பேருக்கு கொரோனா தொற்று -மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

286 0

யாழ். மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 16) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் என 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் 8 பேரும் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேரும் என 20 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பூவரசங்குளம் வைத்தியசாலையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை, சாவாகச்சேரி மற்றும் சங்கானை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.