குறும்பட போட்டியில் யாழ். இளைஞன் இரண்டாமிடம்

361 0
பெண்கள் ஊடக கட்டமைப்பால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு  இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

 “வீட்டு  வேலைகளும் வேலைகளே “ என்ற தொனிப்பொருளில் நாடாளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியிலேயே சி .சிவராஜ், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார் .  இக்குறும்படத்தை இயக்குனர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார் .

குறும்படத்தில் தி.தர்மலிங்கம் , த . சந்திரா , த . அபிஷேகன்  ஆகியோர் நடித்துள்ளனர். மதீசன் இசையமைப்பை கவனிக்க, தொழில் நுட்ப கலைஞர் ஆக  சரவணனும் ரவி வர்மனும் பணியாற்றியுள்ளனர் . கதையை எழுதி இயக்கியுள்ளார் சிவராஜ். இவருடைய இயக்கத்தில் உருவாகி உள்ள ” புத்தி கெட்ட மனிதர் எல்லாம் ”  என்ற முழு நீள திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருப்பது குறிப்பிடவேண்டிய விடயம்.