அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்

293 0

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இது இலங்கையில், புரிதலையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதைப் பார்ப்பது கடினமானது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“இலங்கை படைகளால் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

இதேவேளை, கடந்த புதன் கிழமை இரவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டதுடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டது.

இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். எனினும், இராணுவத்தினர் அந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.