நினைவுத்தூபியை இடித்தழித்தது தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமன் – சிறிதரன்

288 0

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டனம்.
இன்று யாழ்ப்பாணத்தில்   நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் தமிழ் மக்களின் இதயமாக  இருக்கின்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் பங்கு தந்தையர்களால்   கொண்டுசெல்லப்பட்ட ஞாபக கல்லும் அடித்து  நொறுக்கப்பட்டு அல்லது இல்லாமல் செய்யப்பட்டு அங்கு ஏற்கனவே 10 ஆண்டுகளாக அந்த மக்கள் வணங்கி வருகின்ற அந்த நினைவுத்தூபியையும்  இடித்து நொறுக்கி இருக்கிறார்கள்
இந்த செயற்பாட்டினை ராணுவத்தினரும் போலீசாரும் சேர்ந்தே இடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை இது தமிழ் மக்களுடைய இதயங்களை  அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும்
2008ஆம் ஆண்டின் இறுதியிலும் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இந்த உலகப் பந்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போகும் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த முள்ளிவாய்க்கால் என்ற பிரதேசம் உலகத்திலே இன்றும் உன்னிப்பாக பார்க்கப்படுகின்ற ஒரு இடம் ஒரு பெரிய இனப்படுகொலை இந்த பூமிப்பந்தில் நடைபெற்றது
உணவு அந்த மக்களுக்கு அனுப்பாமல் அந்த மக்களை உணவில்லாமல் இருந்ததையும் பச்சைக் குழந்தைகள் கஞ்சிக்காக வந்திருந்த பொழுது கொத்துக் குண்டுகளை வீசி  கொல்லப்பட்டவர்களின்  நினைவினை கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று இடமாக இருந்த  முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில்  இருந்த அந்த இரண்டு கைகளையும் உடைத்தெறிந்து அந்த தூணையும் தகர்க்க முயற்சித்திருக்கிறார்கள் அதனுடைய  பலம் காரணமாக அதனை உடைக்க முடியாமல் போய்விட்டது
குறிப்பாக இது ஒரு தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும்
சிங்கள மேலாதிக்கம் என்பது  தமிழ் மக்கள்  அவர்களுடைய  இறந்த உறவுகளை கூட நினைவு கூருவதற்கு சந்தர்ப்பம்  வழங்காமல் அவர்களுடைய இறந்துபோன உறவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் செய்கின்ற  அந்த நினைவேந்தல் கடமைகளை செய்ய விடாது தடுக்கும் நோக்கோடு இந்த சிங்கள பௌத்த மேலாதிக்க அரசாங்கத்தின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த செயற்பாட்டை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்என்றார்.