மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
இன்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க எத்தனித்த சுமார் 145 வாகனங்கள் இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வாகனங்களில் சுமார் 229 பயணிகள் இருந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் மாகாணம் தழுவிய பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த வாகன சாரதிகள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் சுமார் 14 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருட்கள் தாங்கிய வாகனங்கள் மட்டுமே மாகாணத்திற்குள் பிரவேசிக்கவும் வெளியேறவும் அனுமதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.