எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே “ஈழத்துத் திறமைகள்” (Tamil Eelam’s Got Talent) ஆகும். இந் நிகழ்வு வருடந்தோறும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல் இவ்வருடம் கடந்த 17.12.2016 சனிக்கிழமை அன்று யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்” நிகழ்வு பேர்க்கைம் (Bergheim) நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கலைஞர்களின் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் பங்குபற்றிய கலைஞர்கள் ஆடல், பாடல், இசைக்கருவி மீட்டல் என பல விதத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்திப் பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். போட்டிகளை மதிப்பிட வசந்த் செல்லத்துரை (Vashanth Sellathurai), ரோஷானி(Roshani) மற்றும் ஜெயா ரவீந்திரன் (Jeya Raveendran) ஆகியவர்கள் நடுவர்களாகவும், நிகழ்வினை தொகுத்து வழங்குவதற்கு நிதுசா பாஸ்கரன் (Nithusha Baskaran) மற்றும் அனோஜன் செல்வராஜா (Anojan Selvarajah “Ferrari” ) ஆகியோரும் வருகைதந்து நிகழ்வினை சிறப்பித்தார்கள்.
மேலும் சிறுவர்களுக்கான போட்டி இளையோருக்கான போட்டி என இரு பிரிவாக போட்டிகள் நடைபெற்றன. சிறுவர்களுக்கான போட்டியில் மயூரிஸ்(Mayuris) முதலாம் இடத்தையும், இரண்டாம் இடத்தை நாங்க தமிழ் பசங்க குழுவினரும், மூன்றாம் இடத்தைப் ஸ்வரதாண்டவம் யுனியர்ஸ்(Swarathaandavam Juniors) குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.
இளையோருக்கான போட்டியில் ராகா என அழைக்கப்படும் ராகவன் சண்முகதாஸ் (Ragavan Shanmugathas) முதலாம் இடத்தையும், ரீ.எஸ் ஸ்குவாட் பேர்லின் (TS Squad Berlin) இரண்டாம் இடத்தையும், மூன்றாம் இடத்தை எஸ்.டீ.ஆர் டேன்ஸ் க்ரூ (SDR-Dance Crew) மற்றும் ஸ்வரதாண்டவம் சீனியர்ஸ் (Swarathaandavam Seniors) தட்டிச் சென்றனர். ஈழத்து திறமைகளுக்கான சிறப்பு விருதினை அதிசயம் குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களிற்கு கேடையமும், பங்குபற்றிய அனைவருக்கும் பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நிகழ்வுகள் ஆரம்பமாகி முடிவடையும்வரை பார்வையாளர்கள் எழுந்து செல்லாது நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்தனர். இந் நிகழ்வு வெற்றிபெற உறுதுணையாக இருந்த அனைத்து அன்புள்ளங்களிற்கும், எமது நிகழ்விற்கு அனுசரணை வழங்கி ஆதரவளித்த Saree Outlet Germany, E.S.T.M. Jewellery, IBC Tamil, Nandy’s Catering, Thushi-Deko, Amma’s Food, Isaiclub, zaree.de, TKS Best Foods, Kiri Video, tamil.de, Kuganbau GmbH, luckyfly, Martin & Sons நிறுவனத்தினருக்கும், Segar Enterprise Foto, Adal Photos, HRA Eventtechnik, DJRtec Lighting யினருக்கும் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தமது நன்றியைத் தெரிவித்துகொள்கின்றது.
நன்றி.
தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.