துடித்துக்கொண்டே எழும்பும்.-இரா.செம்பியன்-

328 0

துடித்துக்கொண்டே எழும்பும்.
**********
பகைவனே…!
உன் கையில் ஆயுதங்கள்
அதனால் நீ எப்போதும்
பயத்தோடுதான் வாழ்க்கை
நடத்த வேண்டும்…!
அமைதிகொள்ள தெரியாத
உன்னைப் போலவே
ஒருநாள் கருமேகம் திரளாகி…. முள்ளிவாய்க்கால்ப்
பூமியும் பிரளயம் கொள்ளலாம்…!
சுடரேற்றி மலர்தூவும்
கரங்களுக்கெல்லாம்
விலங்கிடத் துடிக்கும் நீ
தலைகுனிந்து அகம் வணங்கும்
நாளொன்றைக் காணலாம்!
விழியுறங்கும் ஆன்மாக்களின்
பலிபீடங்களை தகர்த்தெறிகின்றாய்…!
உன் விழி பிதுங்க
ஒரு மின்னல் இயற்கையால் ஏவலாம்…!
அறம் கொண்ட தமிழர்
பெரு வாழ்வை சிறு
மணல்த்திட்டில் மட்டும்
அடக்கிட முடியாது….!
நீ இடித்துக்கொண்டேயிரு
அது துடித்துக்கொண்டே எழும்.

-இரா.செம்பியன்-