யோசனைகளுக்கு பதிலளிக்காவிடில் ஆதரவளிக்க மாட்டோம்!

278 0

1615770629untitled-1புதிய அரசியலமைப்பு தொடர்பில் தாம் முன்வைத்த 14 யோசனைகள் குறித்து அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தாம் பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைக் கூட சந்தித்து தெரியப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் தம்மால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து உரிய பதிலளிக்காவிடில் புதிய அரசியலமைப்புக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.