கொழும்பில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா!

281 0

இன்று (12) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,568 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 606 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொள்ளுப்பிட்டியில் 14 பேரும், நாரஹேன்பிடவில் 18 பேரும், பொரளையில் 10 பேரும், கொழும்பு நகர எல்லையில் 53 பேரும், அவிசாவளையில் 22 பேரும், பம்பலப்பிட்டியில் 14 பேரும், பொரலஸ்கமவில் 19 பேரும், கொதடுவையில் 29 பேரும், ஹோமாகமவில் 15 பேரும், கொட்டாவையில் 30 பேரும், பிலியந்தலையில் 36 பேரும், தலங்கமையில் 19 பேரும், வெலிகடையில் 18 பேரும் மற்றும் வெல்லம்பிடியில் 19 பேரும் இவ்வாறு பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, 300 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில், தொம்பே பிரதேசத்தில் 22 பேரும், துன்கல்பிடிய பிரதேசத்தில் 24 பேரும், ஜா-எல பிரதேசத்தில் 31 பேரும், கட்டானை பிரதேசத்தில் 18 பேரும், கட்டுநாயக்க பிரதேசத்தில் 62 பேரும், கொச்சிகடை பிரதேசத்தில் 15 பேரும், மினுவங்கொடை பிரதேசத்தில் 13 பேரும், நீர்க்கொழும்பு பிரதேசத்தில் 35 பேரும் மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தில் 11 பேரும் பதிவாகியுள்ளனர்.

இதேபோல் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 417 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், குருநாகலை மாவட்டத்தில் 196 தொற்றாளர்களும், காலி மாவட்டத்தில் 148 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 108 தொற்றாளர்களும், மற்றும் கண்டி மாவட்டத்தில் 110 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.