வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி!

238 0

யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தொிவித்திருக்கின்றார்.

நேற்று முன்தினம் 1018 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டம் – 35 பேருக்கு தொற்று

யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் 7 பேர், சாவகச்சோி வைத்தியசாலையில் 2 பேர், கோப்பாய் வைத்தியசாலையில் 2 பேர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் ஒருவர்,

மேற்படி 19 பேரும் குறித்த வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்.சிறைச்சாலையில் 2 பேர், சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர் (இந்த 7 போில் 2 பேர் சாவகச்சோி பிரதேச செயலக ஊழியர்கள், மற்றொருவர் சாவகச்சோி வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்)

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் (இவர் நில அளவை திணைக்கள ஊழியர்) கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிலிவில் ஒருவருக்கும் (இவர் நெல்லியடி சந்தை வியாபாரி) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் – 7 பேருக்கு தொற்று

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 7 போில் 6 பேர் புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலை ஊழியர்களாவர். மற்றொருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றவர்.

கிளிநொச்சி மாவட்டம் – 9 பேருக்கு தொற்று

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரும் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றவர்களாவர். அவர்களில் 7 பேர் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.