வவுனியாவில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் மன்னார் வீதியில் இன்று அரச சுற்றுலா விடுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்குரிய இச்சுற்றுலா விடுதியானது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களான கே.கே. மஸ்தான் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் 12 அறைகளை கொண்ட அரச சுற்றுலா விடுதியானது திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் தொடர்ச்சியாக மாவட்டசெயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஒன்று கூடிய அமைச்சர்கள் கிராம உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆவணங்கள் கொண்டுசெல்வதற்கான பைகள் வழங்கப்பட்டதுடன் அவர்களின் குறைகளையும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன கேட்டறிந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கின்ற அபிவிருத்தியில் மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து செய்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் இணங்கியிருப்பதாக தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஒருங்கிணைப்பு குழுவின் பிரதி தலைவர் கே.கே.மஸ்தான்
மக்களுடைய ஒவ்வொரு விடயங்களுக்கும் கிராம அலுவலரின் சிபார்சு தேவைப்படுகிறது. அதனைப் பெறுவதற்கு மக்கள் மிகவும் கஸ்ரப்படுகிறார்கள். கிராம சேவையாளர்களும் தமது வேலைகளை சிரமம் பாராது செய்கின்ற போதும் ஆட் பற்றாக்குறை காரணமாக அவர்கள் ஒவ்வொருவரும் பல இடங்களைப் பார்ப்பதால் அவர்கள் தமது வேலைகளை இலகுவாக செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. மக்களும் தமது சேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன
வடக்கு மக்களின் வாழ்வை சீர்படுத்துவதிலும் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதிலும் விசேட கவனம் செலுத்தி செயல்ப்படுமாறு ஜனதிபதியும் பிரதமரும் பணித்திருக்கும் நிலையில் நாங்கள் வடக்கு பிரதேசங்களில் கூடதலான கவனம் செலுத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.