அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும்

460 0

அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என எச்சரித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பிசிஆர் சோதனையின் போது மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் போதுமானவையில்லை என தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் கடுமையாக கட்டுப்பாடுகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

கொரோனாவைரசின் மூன்றாவது அலை மிகவும் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது சமூகத்தில் பாதிக்கப்பட்ட பலர் நடமாடுகின்றனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டுவாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடையும் என தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய எங்கள் பரிசோதகர்கள் நாளாந்தம் பெருமளவானவர்கள் பாதிக்கப்படுகின்றனர் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவிவருகின்றது என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களையும் இன்னமும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தவில்லை என தெரிவித்துள்ள பாலசூரிய அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு உட்பட மேல்மாகாணம் தொடர்ந்தும் மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் சமூகத்தில் உள்ள தொற்றாளர்களை அடையாளம் காணமேலும் சோதனைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வாழ்க்கை இடம்பெறும் விதம் மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது மேலும் நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு துரித அன்டிஜென் பரிசோதனை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான நிலவரத்தை பொதுமக்களிற்கு தெரிவிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளமை மேலும் வைரஸ் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது கொழும்பில் அனேகமானவர்கள் வைரஸ் ஆபத்தை தீவிரமாக கருதவில்லை எனவும் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள அதிகாரிகள் மேலும் இறுக்கமான நடைமுறைகளை அறிவிக்காதது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள அவர் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மாத்திரம் போதுமானவையல்ல எனவும் தெரிவித்துள்ளார்.