ஊரடங்கின் போது காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என தெலுங்கானா அரசுக்கு தெரிவித்துள்ளது.கொரோனாவின் 2-வது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு மேல் இருக்கிறது.கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர். அதன்படி மகாராஷ்டிராவும், டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், இமாச்சலபிரதேசம், மிசோரம், நாகலாந்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானாவிலும் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 10 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போது காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.