நேர்மை எனும் அந்த சுகம், சவுகர்யம் எல்லாருக்கும் கட்டுப்படியாகாது. உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் இந்த நிலை வெற்றி எனும் பட்டியலில் சேராது எனினும் அந்த பாதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பது உறுதி. எப்படி? நான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மய்யம் 33 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதென்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
இன்னும் 2 ஆயிரம் பேர் வாக்களித்திருந்தால், சரித்திரம் சற்றே மாறியிருக்கும். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அந்த 33 சதவீத மக்கள் நம் பக்கம் இருந்தார்கள். தொடர்ந்து இருப்பார்கள். இதுபோன்று எல்லா தொகுதிகளும் ஆகமுடியும். நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்.
எல்லா தொகுதிகளிலும் பொறுப்புகளுக்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தும் அந்த பொறுப்புகளுக்கு ஆள் போடாமல் இருந்தது விபத்தல்ல என்பது இப்போது வெளிச்சமாகிறது.
நேர்மை எனும் அந்த சுகம், சவுகர்யம் எல்லாருக்கும் கட்டுப்படியாகாது. உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் (இ.மெயில்) செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது.
கட்சிக்கு மகத்தானது. எனவே தவறாது உங்கள் சிந்தனைகளை எழுத்தில் அனுப்புங்கள். இன்றே நம் வசப்படுத்துவோம், நாளை நமதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.