வாகன அபராத தொகை செலுத்துவதற்காக சகல மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் தனிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தபால் துறை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக, வாகன அபராத தொகை செலுத்துவதற்காக சகல மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் தனிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையாளர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.